இலங்கை

நல்லூா் பிரதேச பண்பாட்டு விழா – 2025

Published

on

நல்லூா் பிரதேச பண்பாட்டு விழா – 2025

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூா் பிரதேச செயலகம் கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் (25.07.2025) வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கொக்குவில் செல்வமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நல்லூா் பிரதேச செயலாளர் திருமதி.உதயகுமாா் யசோதா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் உயர்திரு. கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், இராஜேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் உயர்திரு.செல்லத்துரை திருமாறன் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Advertisement

அமரர் குழந்தை சண்முகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாச்சிமாா் கோயிலிருந்து பண்பாட்டுப் பேரணியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம்,மங்கல இசை, இசைச்சங்கமம், நாடகம் (மாருதப்புரவீகவல்லி) நடனம் (தமிழ் வணக்கம் – நல்லைக் கலாமந்தீர் நடனாலயம் ) இசை நாடகம் (சத்தியவான் சாவித்திரி) என்பன சிறப்பாக நடைபெற்றது.

மூத்த கலைஞர்களுக்கான “கலை ஞானச்சுடர் விருது” மற்றும் இளங்கலைஞர்களுக்கான இளங்கலைஞர் விருதுகள் என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version