தொழில்நுட்பம்
பிரபஞ்சத்தின் முடிவு நெருங்குகிறதா? புதிய ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்!
பிரபஞ்சத்தின் முடிவு நெருங்குகிறதா? புதிய ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்!
நாம் வாழும் பிரபஞ்சம் முடிவுக்கு வரும் காலம் நாம் கற்பனை செய்ததை விட வெகு அருகில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சமீபத்திய வானியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் உருவான புதிய கோட்பாடு, நமது அண்டம் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளில் விரிவடைவதை நிறுத்திவிட்டு, பின்னர் சுருங்கத் தொடங்கி, 33 பில்லியன் ஆண்டுகளில் முழுமையாக முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கால அளவு மிக நீண்டதாகத் தோன்றினாலும், அண்டவியல் ரீதியாக “அதிர்ச்சியூட்டும்” வகையில் விரைவானது என்றே கருதப்படுகிறது.கடந்த ஓராண்டாக, டார்க் எனர்ஜி சர்வே (DES) மற்றும் டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட் (DESI) ஆகியவற்றில் பணிபுரியும் வானியலாளர்கள் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். பிரபஞ்சத்தை வேகமாகவும் வேகமாகவும் விரிவடையச் செய்யும் மர்மமான Dark Energy, ஒருவேளை நிரந்தரமானதாக இல்லாமல் இருக்கலாம். மாறாக, அது காலப்போக்கில் மாறக்கூடும் என்று கருதுகின்றனர். இது உண்மையென்றால், நவீன இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான, கரும்சக்தி நிலையானது மற்றும் மாறாதது என்ற கருத்தை இது சவால் செய்யும்.தற்போது, டார்க் எனெர்ஜி முன்னணி மாதிரி அண்டவியல் மாறிலி (cosmological constant) ஆகும். இது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஐன்ஸ்டீன் தனது சமன்பாடுகளில் அறிமுகப்படுத்திய ஒரு எண். ஆனால் புதிய கண்டுபிடிப்புகள், இந்த மாறிலி உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விளக்க போதுமானதாக இருக்காது என்று சுட்டிக்காட்டுகின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஜூன் மாதம் வெளியிடப்பட்ட, peer-reviewed புதிய ஆய்வுக் கட்டுரை (“The Lifespan of our Universe”), கரும்சக்தி 2 கூறுகளைக் கொண்டது என்ற மிக சிக்கலான யோசனையை முன்வைக்கிறது. முதலாவது axion எனப்படும் விசித்திரமான, கற்பனையான துகள். இது மிக இலகுவானது மற்றும் மிகவும் கண்டறிய முடியாதது என்பதால், மற்றவற்றுடன் அரிதாகவே தொடர்பு கொள்கிறது. இந்த ஆக்சியான்களை ஒரு மென்மையான ஆற்றல் மூடுபனிபோல கற்பனை செய்து கொள்ளலாம். இது பிரபஞ்சம் முழுவதும் அமைதியாக விரிவடைந்து, அதன் தற்போதைய விரிவாக்கத்திற்கு எரிபொருளாக உள்ளது.2-வது கூறு அண்டவியல் மாறிலிதான், ஆனால் இந்த மாதிரியில், அது எதிர்மறையாக உள்ளது. ஒரு நேர்மறை மாறிலி வெளியை வெளிநோக்கித் தள்ளுவதற்கு மாறாக, எதிர்மறை மாறிலி அதை மீண்டும் உள்ளிழுக்கும். தற்போது, ஆக்சியான்கள் பெரும்பாலான விரிவாக்கப் பணிகளைச் செய்கின்றன. ஆனால் காலம் செல்ல செல்ல, ஆக்சியான்கள் மங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மங்கும்போது, எதிர்மறை அண்டவியல் மாறிலி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். இது விரிவாக்கத்தை மெதுவாக்கி, பின்னர் அதை மாற்றியமைக்கும்.இது ஒரு வியத்தகு புதிய கட்டத்தைத் தொடங்கும். Big Crunch நட்சத்திர மண்டலங்கள் ஒன்றோடொன்று மோதும். விண்வெளி சுருங்கும். பிரபஞ்சம் வெப்பமடைந்து, அடர்த்தியாகி, இறுதியில் இறுதி ஒருமைத்தன்மையில் (singularity) சுழலும், இது பெரு வெடிப்புக்கு (Big Bang) நேர் எதிரானது. கோட்பாட்டாளர்களின் கூற்றுப்படி, “முடிவின் ஆரம்பம்” சுமார் 10 பில்லியன் ஆண்டுகளில் தொடங்கும், இது பிரபஞ்சத்தின் தற்போதைய வயதை விடக் குறைவு. அதற்குப் பிறகு, எல்லாம் சுருங்குவதற்கு மேலும் 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும். பிரபஞ்சம், சுமார் 33 பில்லியன் ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டிருக்கும். அதாவது, அது ஏற்கனவே அதன் பாதி ஆயுளைத் தாண்டிவிட்டது என்று பொருள்.நிச்சயமாக, இந்த கோட்பாடு இன்னும் மிகவும் அனுமானமானது. DES மற்றும் DESI கண்டுபிடிப்புகள் ஆரம்பகட்ட முடிவுகளே. எதிர்கால அவதானிப்புகளால் அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அண்டவியல் மாறிலி தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலும், இந்த 2 பகுதி ஆக்சியான் மாதிரி சரியானது என்பதை அது தானாகவே நிரூபிக்காது. ஆனாலும், நாம் அறிந்த அனைத்தின் இறுதிக் கதியைப் பற்றிய புதிய கேள்விகளுக்கு இது வழி வகுக்கிறது. அதுவரை, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.