இலங்கை
பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்
பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்
கலேவெல, ஹீனுகல, மகுலுகஸ்வெவ வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று அதிகாலை குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் வேட்டைக்கு சென்றுள்ளதுடன் உரிமம் இல்லாத 3 12-போர் துப்பாக்கியால் ஒரு கர்ப்பிணி மானை வேட்டையாடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஊரவர்களுக்கு தகவல் கிடைத்தவுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 04 சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து கட்டி வைத்து தாக்கியுள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கலேவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீதும் எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.