இலங்கை

யாழில் பிள்ளைகள் கண் முன்னே தந்தை செய்த விபரீத செயல் ; துயரில் கதறும் குடும்பம்

Published

on

யாழில் பிள்ளைகள் கண் முன்னே தந்தை செய்த விபரீத செயல் ; துயரில் கதறும் குடும்பம்

யாழில் அளவுக்கு அதிகமான மதுபானத்தை பாவித்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பாவித்து விட்டு வீட்டுக்கு வந்து உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.

பின்னர் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் அவர் தூக்கில் தொங்குவதை அவரது பிள்ளைகள் அவதுள்ளனர். 

இந்நிலையில் அவரை தூக்கில் இருந்து மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளில் அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்தியதால் தன்நிலை மறந்து இவ்வாறு உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version