டி.வி
வீடு தேடிப்போய் அடிவாங்கும் மனோஜ்,ரோகிணி! விஜயாவை காப்பாத்த மாஸ்டர் பிளான் பண்ணும் முத்து!
வீடு தேடிப்போய் அடிவாங்கும் மனோஜ்,ரோகிணி! விஜயாவை காப்பாத்த மாஸ்டர் பிளான் பண்ணும் முத்து!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி அம்மா விஜயா வீட்ட வந்து நான் வேணும் என்றால் பொலிஸிட்ட கம்பிளைன்ட் கொடுக்கவா என்று கேட்கிறார். அதுக்கு ஸ்ருதி அப்புடி கம்பிளைன்ட் கொடுத்தால் முதலில ஆன்ட்டிய தான் அரெஸ்ட் பண்ணுவாங்க என்கிறார். அதைக் கேட்ட விஜயா ஷாக் ஆகுறார். பின் ஸ்ருதி அம்மா தங்கட கேரளா வீட்டில கொஞ்ச நாள் போய் இருந்திட்டு வரச்சொல்லுறார்.அதனை அடுத்து விஜயா ஸ்ருதி அம்மாவப் பார்த்து எனக்கு எந்த பயமும் இல்ல நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லுறார். பின் மனோஜ் ஷோரூமில வேலை செய்யுற பொம்பிள ரோகிணியை பார்த்து அண்ணா அந்த லேகியத்தை சாப்பிட்டாரா என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி நான் இன்னும் கொடுக்கல என்று சொல்லுறார். அதைக் கேட்ட அந்த பொம்பிள லேகியத்தை அண்டைக்கே சாப்பிடணும் அதுக்கப்புறம் சாப்பிட்டும் பிரயோசனம் இல்ல என்கிறார்.இதனைத் தொடர்ந்து ஷோரூமில வேலை செய்யுற பொம்பிள ரோகிணிக்கு விஜயாவை காப்பாத்துறதுக்கு அந்த குடும்பத்துக்கு காசு கொடுத்தால் பிரச்சனை முடிஞ்சிடும் என்று ஜோசனை சொல்லுறார். ரோகிணியும் அந்த குடும்பத்துக்கு காசு கொடுக்கிறதுக்கு முடிவெடுக்கிறார். பின் மீனா ரதியை ஏமாத்தின பையனுக்கு போன் எடுத்து ரதி உயிருக்கு போராடுறாள் என்று சொல்லுறார்.அதனை அடுத்து ரோகிணியும் மனோஜும் ரதி வீட்ட காசு கொடுக்கிறதுக்காக போய் நிற்கிறார்கள். அதைப் பார்த்த ரதி வீட்டு ஆட்கள் மனோஜை கட்டிப்போட்டு ரூமுக்குள்ள அடைச்சுவிடுறார்கள். பின் ரதியை லவ் பண்ணின பையன் முத்துவ பார்க்க வந்து நிக்கிறார். பின் அந்த பையன் முத்து கிட்ட நான் ரதியை உண்மையா லவ் பண்ணுறேன் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.