தொழில்நுட்பம்

7,020mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜ்… ரூ.8,000 பட்ஜெட்டில் ஹானர் பேட் X7 டேப்லெட் அறிமுகம்!

Published

on

7,020mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜ்… ரூ.8,000 பட்ஜெட்டில் ஹானர் பேட் X7 டேப்லெட் அறிமுகம்!

ஹானர் (Honor) நிறுவனம் தனது புதிய டேப்லெட்டான ஹானர் பேட் X7 (Honor Pad X7)-ஐ சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் மூலம் இயங்குகிறது.சிறப்பம்சங்கள்:செயல்திறன்: ஹானர் பேட் X7 ஆனது Android 15-ல் இயங்குகிறது. ஆக்டா-கோர் 6nm ஸ்னாப்டிராகன் 680 SoC ப்ராசஸர் மற்றும் Adreno 610 GPU உடன் வருகிறது. இதில் 6GB வரை ரேம் + 128GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மைக்ரோ SD கார்டு மூலம் சேமிப்பகத்தை 1TB வரை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.டிஸ்ப்ளே: 8.7 இன்ச் LCD டிஸ்ப்ளேவை (800×1,340 பிக்சல்கள்) கொண்டுள்ளது. இதன் பிக்சல் அடர்த்தி 180ppi, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 85% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டிஸ்ப்ளே 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ். மேலும், இது TÜV Rheinland LowBlue Light மற்றும் TÜV Rheinland Flicker Free சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.கேமரா: ஹானர் பேட் X7-ன் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் (ஆட்டோஃபோகஸ் மற்றும் f/2.0 அப்பர்ச்சர்) உள்ளது. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் (f/2.2 அப்பர்ச்சர் மற்றும் பிக்ஸட் ஃபோகஸ்) கொடுக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டின் பின்புறம் மெட்டல் பேனல் கொண்டது. இதில் ப்ளூடூத் 5.0 மற்றும் வைஃபை 5 வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சமாக, ஃபேஸ் அன்லாக் அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.பேட்டரி: ஹானர் பேட் X7 7,020mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 10W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது, மேலும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 56 நாட்கள் வரை ஸ்டாண்ட்பை நேரம் கிடைக்கும் என ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டேப்லெட் 211.8×124.8×7.99mm அளவுகளுடன், 365 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இது Grey நிற வண்ணத்தில் கிடைக்கிறது.விலை:ஹானர் பேட் X7 ஆனது 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு SAR 349 (இந்திய மதிப்பில் ரூ. 8,000) என்ற அறிமுக விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்புச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. அதன் பிறகு இதன் வழக்கமான விலை SAR 449 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10,300) ஆக இருக்கும். இது தற்போது சவூதி அரேபியாவில் ஒரே கிரே நிற விருப்பத்தில் வாங்கக் கிடைக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version