சினிமா
“என் குட்டி இளவரசி ரஹீமா”… கல்வியில் சாதனை…!ரஹ்மானின் நெகிழ வைக்கும் பதிவு…!
“என் குட்டி இளவரசி ரஹீமா”… கல்வியில் சாதனை…!ரஹ்மானின் நெகிழ வைக்கும் பதிவு…!
இந்திய இசை உலகில் தனக்கென ஒரு சிறப்பிடம் பிடித்துள்ள இசை மேதை ஏ.ஆர். ரஹ்மான், தனது மகள் ரஹீமா குறித்தொரு உணர்ச்சிபூர்வமான பதிவை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் ரஹ்மான், ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளராக பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் மகள் கதிஜா இருவரும் இசை துறையில் தங்களை நிலைநிறுத்தி வருகிறார்கள். ஆனால், ரஹ்மானின் இளைய மகள் ரஹீமா இசையிலும் பிரபலத்திலும் ஆர்வம் காட்டாமல், சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.தற்போது ரஹீமா, அமெரிக்காவிலுள்ள கிளியன் (Culinary Institute of America) உயர்கல்வி நிறுவனத்தில் தனது கல்வியை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இதனை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த ரஹ்மான், “என் குட்டி இளவரசி ரஹீமா, விருந்தோம்பல், தொழில் முனைவு மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி கிளியன் உயர்கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். பெருமை-அப்பா பெண் தலைவர்கள் அல்ஹம்துலில்லாஹ்” என குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவதுடன், ரஹீமாவுக்கும் ரஹ்மானுக்கும் பலராலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.