இந்தியா

பலத்த சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை

Published

on

பலத்த சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் தெரிவித்ததாவது:-25.07.25 தேதியிட்ட சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் தமிழுக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலுக்கு மீன்பிடித்தலுக்கு செல்லும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மேலும் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வானிலை எச்சரிக்கை அறிவிப்பு அவ்வப்பொழுது வெளியிடப்படும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version