பொழுதுபோக்கு
மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை: கணவன்- மனைவி என ஹேஷ்டேக் போட்ட ஜாய் கிரிசில்டா; போட்டோ வெளியிட்ட முதல் மனைவி சுருதி
மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை: கணவன்- மனைவி என ஹேஷ்டேக் போட்ட ஜாய் கிரிசில்டா; போட்டோ வெளியிட்ட முதல் மனைவி சுருதி
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரங்கராஜூவின் முதல் மனைவி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்கஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட நிலையில், அடுத்து கீர்த்தி சுரேஷின் பென்குயின் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டில் நடக்கும் விஷேஷங்களுக்கு கேட்டிரிங் சர்விஸ் செய்வதன் மூலம் மக்கள்மத்தியில் ரொம்பவே பிரபலமானார்.இதன் மூலம் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பினை பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ், அவரது சமையல் குறித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் சொந்த வாழ்க்கையில் குறிப்பாக திருமண வாழ்க்கை குறித்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார், இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாதம்பட்டிய ரங்கராஜும் காஸ்டியூம் டிசைனர், ஜாய் கிரிசல்டாவை திருமணம் செய்துகொண்டதாக தகவவல்கள் வெளியானது.அப்போது, முதல் மனைவி சுருதியிருக்கும் போது எப்படி அவர் இரண்டாவது திருமணம் செய்தகோண்டார். இவர்களுக்கு எப்போது விவாகரத்து ஆச்சு, என பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தது. இதற்கு முக்கிய காரணம், ஜாய் கிரிசல்டா காதலர் தினத்தை ரங்கராஜூவுடன் செலிபிரேட் செய்ததகா சமூகவைலதளத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல், தான் தாலியோட இருக்குற மாதிரியான போட்டோக்களையும் வெளியிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுததியது.இந்த சர்ச்சைகள் இணையத்தில் வைரலாக பரவியபோது, ரங்கராஜ் மனைவி சுருதியும் எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. நான் தான் அவரின் மனைவி என்றும் கூறியிருந்தார். இதற்காக குடும்ப புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜும் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, பர்ச்னல் விஷயங்கள பற்றின எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது, அப்படி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தா இதைப்பற்றி பேசுறேன் என்று கூறியிருந்தார். மேலும் திருமணம் பற்றி வெளியாகும் செய்திகளையும் உண்மையில்லை என்றும் கூறியிருந்தார்.இதனிடையே தற்போது, ஜாய் கிரிசல்டா மாதம்பட்டி ரங்கராஜூவுடன் திருமணம் நடந்ததகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்டாவுக்கு நெத்தில குங்குமம் வைக்கிறார். இந்த ஃபோட்டோவை வெளியிட்ட ஜாய் கிரிசல்டா மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்கராஜ் என்று பதிவிட்டு, ஹாஷ்டாக்கில், ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் என்று குறிப்பிட்டுள்ளார். A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)அதேபோல் ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி தான் கடைசியாக ஷேர் செய்த புகைப்படத்தில் தனது இரு மகன்களுடன், என் மனசும் என்னுடைய ஆன்மாவும் இவங்க்களோட முடிவிடும் என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம் ரங்கராஜ் – ஸ்ருதி இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஜாய் கிரிசல்டா தான் கழுத்தில் அணிந்திருக்கும் செயினில் கூட ரங்கராஜ் என்று பெயரிட்டுள்ளார். முதல் மனைவியே விவாகரம் பண்ணாமல் 2வது கல்யாணம் பண்ணிக்கிறது குற்றம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது.