வணிகம்

லட்ச கணக்கில் ஜி.எஸ்.டி நோட்டீஸ்… யு.பி.ஐ-யை தூக்கி எறியும் வியாபாரிகள்: விளக்கும் ஆனந்த் சீனிவாசன்

Published

on

லட்ச கணக்கில் ஜி.எஸ்.டி நோட்டீஸ்… யு.பி.ஐ-யை தூக்கி எறியும் வியாபாரிகள்: விளக்கும் ஆனந்த் சீனிவாசன்

சமீப நாட்களில் கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சிறு வியாபாரிகள், தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் போன்றோர், இனி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மூலம் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று அதிரடியாக முடிவு எடுத்துள்ளனர். மேலும், தங்கள் கடைகளில் இருந்து யு.பி.ஐ ஸ்டிக்கர்களை கிழித்து எறிந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.ஏனெனில், லட்சக்கணக்கான பணத்தை ஜி.எஸ்.டி-க்கு அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று பல்வேறு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், யு.பி.ஐ விவகாரம் தொடர்பாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், மக்கள் பேச்சு என்ற யூடியூப் சேனலுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.அதில், “தள்ளுவண்டிக் கடைக்காரர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 40 லட்சம் வரை யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதன் காரணத்தால் ஜி.எஸ்.டி செலுத்தக் கூறி நோட்டீஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூரு போன்ற பகுதிகளில் சிறிய கடைகளில் இனி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.இந்த 18 சதவீத வரியில் 9 சதவீதத்தை மாநில அரசும், 9 சதவீதத்தை மத்திய அரசும் எடுத்துக் கொள்கிறது. அரசுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக இவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சிறிய வியாபாரிகள் ஜி.எஸ்.டி பதிவு செய்யவில்லை எனக் கூறி, அவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அபராதத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.சுமார் ரூ. 1.5 கோடி வரை அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும் என்று பல வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில் வியாபாரிகள் வங்கிக் கணக்கில் ரூ. 40 லட்சம் இருப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவதை விட, ரூ. 40 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருந்தால் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.இது போன்ற வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இதில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version