இலங்கை

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை குறைக்க ஜனாதிபதி அனுரா பேச்சுவார்த்தை

Published

on

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை குறைக்க ஜனாதிபதி அனுரா பேச்சுவார்த்தை

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகளைக் குறைப்பது குறித்து, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தூதுவர் ஜேமிசன் கிரீர் ஆகியோருக்கு இடையே இணையம் வாயிலாக ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதோடு, அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வரிகளை குறைப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.

Advertisement

இந்தக் சந்திப்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஐக்கிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் ஆடைகள் உட்பட பல பொருட்களின் ஏற்றுமதி, அமெரிக்காவின் இந்த வரிகளால் பாதிக்கப்படக்கூடும் என்பதால், இலங்கை அரசு இந்த வரிகளைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version