இலங்கை
அமெரிக்க கடற்படை சீல் பயிற்சி – வெற்றிகரமாக முடித்த முதலாவது இலங்கையர்!
அமெரிக்க கடற்படை சீல் பயிற்சி – வெற்றிகரமாக முடித்த முதலாவது இலங்கையர்!
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு பிரிவை சேர்ந்த (Special Boat Squadron) லெப்டினன்ட் கொயான் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) வெற்றிகரமாக நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்ற சாதனை படைத்துள்ளார்.
லெப்டினன்ட் கொயான் சமித “SEAL Trident” என்ற பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டமானது 14 மாத காலமாக இடம்பெற்றுள்ளது.
இது உலகில் உள்ள மிகவும் கடினமான கடற்படை பயிற்சித் திட்டமாகும்.
இந்த கடற்படை பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 75 சதவீதமானோர் பயிற்சித் திட்டத்தின் இறுதி வரை நீடித்திருந்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.