இலங்கை

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரின் திருமணங்கள்

Published

on

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரின் திருமணங்கள்

தமிழகத்தின் மேட்டுப்பாளையம் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழர் மணமக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன.

மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களைப் பதிவு செய்வதற்காகச் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யத் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

Advertisement

அதற்கமைய, மேட்டுப்பாளையம் வேடர் குடியிருப்பு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான, 22 மணமக்களின் திருமணங்கள் மேட்டுப்பாளையம் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டன.

இதேவேளை, சட்டவிரோதமாகத் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடு கடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – செங்குன்றம் பகுதியில் அவர் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் குறித்த நபர் சட்டவிரோதமாகப் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version