பொழுதுபோக்கு

என்ன இப்படியே பேசிட்டு இருக்கீங்க, எத்தனை டைம் சொல்றது? கமல்ஹாசனை மிரட்டிய கோவை சரளா!

Published

on

என்ன இப்படியே பேசிட்டு இருக்கீங்க, எத்தனை டைம் சொல்றது? கமல்ஹாசனை மிரட்டிய கோவை சரளா!

சதிலீலாவதி படத்தின் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனுக்கு கோவை பாஷை கற்றுக்கொடுத்த நடிகை கோவை சரளா, அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் என பல கேரக்டரில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 1979-ம் ஆண்டு வெளியான வெள்ளிரதம் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான இவர், பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.அதன்பிறகு வைதேசி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு சின்ன வீடு, காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் தனது காமெடி மூலம் தனி முத்திரை பதித்த கோவை சரளா, சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் கமல் – கோவை சரளா இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தனது இளம் வயதிலேயே சின்ன வீடு படத்தில் நடிகர் பாக்யராஜூவின் அம்மாவாக நடித்திருப்பார்.அதேபோல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சூரி உள்ளிட்ட காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, கரகாட்டகாரன் படத்தில் நடித்தது இன்றளவும் கோவை சரளாவின் நடிப்பை ரசிக்கும் படங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் சதீலீலாவதி. இந்த படத்தில் நான் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் 4 மாதங்கள் காத்திருந்ததாக கூறியுள்ள கோவை சரளா, இந்த படத்தில் அவர் பேசும் கோயம்புத்தூர் தமிழ் வசனம் அனைத்தையும் சொல்லிக்கொடுத்த நான்தான் என்று கூறியுள்ளார்.பாலுமகேந்திரா இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் சதிலீலாவதி. கமல்ஹாசன் ஜோடியாக கோவை சரளா நடித்திருந்த இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த், ராஜா, ஹீரா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். காமெடி படமாக வெளியான சதிலீாவதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சக்திவேல் கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு மனைவி பழனி கேரக்டரில் கோவை சரளா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க கேட்டபோது பல படங்கள் கமிட் ஆகி இருந்ததால், 4 மாதங்கள் காத்திருந்துள்ளனர்.படப்பிடிப்புக்கு வந்தபோது படத்தின் வசனகர்த்தா, கிரேஸி மோகன், கோவை சரளாவிடம் கோவை பாஷை நீங்கள் தான் கமல்ஹாசனுக்கு சொல்லித்தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு லெஜண்ட் நடிகர் என்று முதலில் பயந்தாலும் அதன்பிறகு அவரிடம் சகஜமாக பழனி கோவை பாஷை கற்றுக்கொடுத்துள்ளார். இதை கமல்ஹாசன் ஸ்கூள் பிள்ளைகள் மாதிரியே உட்கார்ந்து கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்க, கமல்ஹாசன் என்பதையே மறந்து என்ன நீங்க இப்படியே பேசிட்டு இருக்கீங்க, எத்தனை தடவை சொல்லி கொடுக்கிறது என்று கேட்டுள்ளார்.கோவை சரளாவின் இந்த வார்த்தையை கேட்டு கமல்ஹாசன் கோபப்படாமல், இப்போதான் நீங்க லைனுக்கு வறீங்க என்று சொல்லி என்க்ரேஜ் செய்துள்ளார். அதன்பிற ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்த தகவலை கோவை சரளா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version