சினிமா
கஜினி போல் கதை ,துப்பாக்கி போல ஆக்ஷன்…! மதராஸி படம் குறித்து முருகதாஸின் பதிவு ….!
கஜினி போல் கதை ,துப்பாக்கி போல ஆக்ஷன்…! மதராஸி படம் குறித்து முருகதாஸின் பதிவு ….!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘மதராஸி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியது வெற்றியின் மற்றொரு பெயராக விளங்கும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.சமீபத்தில் ‘மதராஸி’ திரைப்படம் குறித்து பேசிய முருகதாஸ், “இந்த படத்தின் திரைக்கதை ‘கஜினி’ போன்று உணர்ச்சிகளால் நிரம்பியதாகவும், ஆக்ஷன் காட்சிகள் ‘துப்பாக்கி’ போல அதிரடியாகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது போலவே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும் அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. முருகதாஸ் கடைசியாக கொடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த படம் அவருக்கு மிக முக்கியமான ஒரு திரும்பிப் பார்க்கும் தருணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கின்றார் முருகதாஸ். அவரது இயக்கத்தில் உருவாகும் இந்த மாஸ் Entertainer ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.