இலங்கை

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை!

Published

on

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை!

கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமைகளின் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புக்கள், 

Advertisement

பொதுமக்களின் இடம்பெயர்வுகள் மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள் சேதமடைதல் குறித்தும் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. 

அஹிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை மையமாகக் கொண்ட புத்தரின் போதனைகளால் வழிநடத்தப்படும் இருதேசங்களிலும் அமைதி நிலவ வேண்டும் என இலங்கை எதிர்பார்க்கிறது.

இரு நாடுகளும் முரண்பாட்டு நிலைமைகளை அமைதியாகத் தீர்க்கும் நோக்கில் ஆரம்பகட்ட இராஜதந்திர உரையாடலில் ஈடுபட வேண்டும் என இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version