இலங்கை
கால்வாயில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; தீவிரமாகும் விசாரணைகள்
கால்வாயில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; தீவிரமாகும் விசாரணைகள்
திம்புள்ள பத்தனை பிரதேசத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.
[31OSXHஸ
அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.