இலங்கை

சூதாட்ட குற்றச்சாட்டில் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது

Published

on

சூதாட்ட குற்றச்சாட்டில் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது

களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13
பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாத்துவை பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையும் அவரின் தாயும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

இதேவேளை, அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் பொலிஸாரால்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version