இலங்கை

திருமண நிகழ்வுக்கு தயாரான சிறுமிக்கு நேர்ந்த துயரம்

Published

on

திருமண நிகழ்வுக்கு தயாரான சிறுமிக்கு நேர்ந்த துயரம்

    கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டு சிறுமியின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, சிறுமி வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் இன்று (26)) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் சிறுமி சடலமாக மீட்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீடகப்பட்ட சிறுமி கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version