இலங்கை
தீவிர சிக்கலில் பிள்ளையானின் சகாக்கள் ; சுற்றி வளைக்கப்பட்ட இனியபாரதியின் வீடு
தீவிர சிக்கலில் பிள்ளையானின் சகாக்கள் ; சுற்றி வளைக்கப்பட்ட இனியபாரதியின் வீடு
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள், ஆட்கடத்தல்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரின் வீடு மற்றும் அலுவலகம் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆறாம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்றைய தினம், அவர் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் என்பன, பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் பலனாய்வுப் பிரிவினாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்றப் புலனாய்வு பிரிவினரினால் முன்னதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிந்த சந்தேகநபர்கள் இருவரும் குறித்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே, இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.