இலங்கை
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியை தாக்கியவர்கள் கைது
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியை தாக்கியவர்கள் கைது
கண்டி – ஹந்தானை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தின் சாரதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கண்டி நீதவான் முன்னிலையில், சந்தேக நபர்கள் 04 பேரும் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 21, 26, 27 வயதான மூன்று இளைஞர்களும், 38 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேரூந்து ஒன்றின் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.