இலங்கை

மாணவர்கள் மத்தியில் கண்டல்காடுகள் தொடர்பான விழிப்புணர்வு!

Published

on

மாணவர்கள் மத்தியில் கண்டல்காடுகள் தொடர்பான விழிப்புணர்வு!

மாணவர்கள் மத்தியில் கண்டல்காடுகள் தொடர்பான விழிப்புணர்வையும், அவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மனநிலையையும் ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான கண்டல் காடுகள் ஊடான களப்பயணம் ஒன்று இன்று மண்டைதீவு சதுப்பு நிலப்பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டது.

எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகம் மற்றும் சிறகுகள் அமையம் இணைந்து சர்வதேச கண்டல் காடுகள் தினத்தை (ஜுலை 26) முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தாவரவியல் துறையின் தொழில்நுட்ப அனுசரணையுடன் குறித்த களப்பயணம் முன்னெடுக்கப்பட்டது. 

Advertisement

இதில் அராலி கிழக்கு அமெரிக்கன்மிசன் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் 70 மாணவர்கள் வரை பங்குபற்றி பயன்பெற்றனர்.

இச் செயற்பாடுகளிற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை யாழ் பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் இ.சி.ஜெயசீலன் தலைமையிலான மாணவ அணியினர் முன்வைத்தும் இருந்தனர்.

இதில் சிறகுகள் அமையத்தைச் சேர்ந்த இளைஞர்கள், Clean Ocean force நிறுவன உத்தியோகத்தர்கள், வனவிலங்குகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தோர் என பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version