இலங்கை
மாலைத்தீவு பிரஜைகளுக்கு 1 வருட விசா; அமைச்சர் விஜித ஹேரத்
மாலைத்தீவு பிரஜைகளுக்கு 1 வருட விசா; அமைச்சர் விஜித ஹேரத்
வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மாலைத்தீவை சேர்ந்தவர்களுக்கு 1 வருட விசாவை அரசாங்கம் வழங்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை இதுவரை மாலைத்தீவு மக்களுக்குக் குறுகிய கால விசாவை மட்டுமே வழங்கி வந்தாலும், புதிய நீண்ட கால விசா ஒரு வருடம் வரை தங்க அனுமதிக்கும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் மாலைத்தீவு மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்குப் பயணம் செய்து வரும் நிலையில் சமீபத்திய விசா கட்டுப்பாடுகள் இதற்கு இடையூறாக உள்ளன என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள நிலையில், இந்த விஜயத்தின் போது புதிய விசா கொள்கை முறையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.