இலங்கை
முன்னாள் அமைச்சர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி
முன்னாள் அமைச்சர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி
முன்னாள் அமைச்சர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் பிரவு சிறை அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது அங்கு ஆறு தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான மஹிந்த ஆனந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ, எஸ்.எம். ரஞ்சித், துமிந்த சில்வா ஆகியோர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களைத் தவிர, பல வெளிநாட்டினரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.