இலங்கை

யாழில் தீயில் கருகி பலியான முதியவர் ; விசாரணையில் வெளியான பகீர் காரணம்

Published

on

யாழில் தீயில் கருகி பலியான முதியவர் ; விசாரணையில் வெளியான பகீர் காரணம்

அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையிலேயே எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் இன்று (27) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வயோதிபர் வாழ்ந்த வீட்டில் இருந்து புகை வெளிவருவதை வீதியில் சென்ற அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று  குறித்த முதியவரை மீட்க முயற்சித்துள்ளார். ஆனாலும் குறித்த முதியவர் தீயில் கருகி ஏற்கனவே உயிரிழந்துள்ளார்

சம்பவ இடத்துக்கு தீவகப்பகுதி மரண விசாரணை அதிகாரி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பொலிசாரின் ஒத்துழைப்புடன் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த சில மாதங்களாக குறித்த முதியவர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட குறித்த முதியவர் பாவித்த பீடியின் மூலம் அவர் உறங்கும் மெத்தையில் ஏற்பட்ட தீயின் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version