இலங்கை

யாழில் 10 நாட்களாக வீடு திரும்பாத மாணவி; பொலிசார் அசமந்தம்

Published

on

யாழில் 10 நாட்களாக வீடு திரும்பாத மாணவி; பொலிசார் அசமந்தம்

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீபன் விகாசினி என்பவரை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த யூலை 15 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை போன்று சென்றுள்ளார்.

ஆனால் அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை அத்துடன் வீட்டுக்கும் வரவில்லை என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாண பொலிசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஆனால் இன்றுடன் இரு வாரங்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளதுடன் தனது மகளை கண்டுபிடித்து தர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version