பொழுதுபோக்கு

யூத் ஃபாலோ அதிகம்; பிரபுதேவா தான் சரியா இருப்பார்: காதலன் படத்தில் பிரபல ஹீரோவை கழற்றி விட்ட ஷங்கர்!

Published

on

யூத் ஃபாலோ அதிகம்; பிரபுதேவா தான் சரியா இருப்பார்: காதலன் படத்தில் பிரபல ஹீரோவை கழற்றி விட்ட ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த காதலன் திரைப்படத்தில், முதலில் பிரசாந்தை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது என்று அன்றைய காலகட்டத்தில் அவரிடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.பிரம்மாண்ட இயக்குநர் என்ற பட்டத்திற்கு இன்றளவும் பொருத்தமாக இருப்பவர் ஷங்கர் என்று சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர். யதார்த்த கதைக்களத்தில் இருந்த தமிழ் சினிமாவை மற்றொரு திசையை நோக்கி பயணிக்க வைத்த ஆற்றல் இயக்குநர் ஷங்கரிடம் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு எடுத்துக்காட்டாக அவரது முதல் திரைப்படமான ஜென்டில்மேன் தொடங்கி சமீபத்திய வெளியீடான கேம் சேஞ்சர் வரை அனைத்தையும் கூறலாம்.இதில் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. கமல்ஹாசனுடன் சேர்ந்து இந்தியன், ரஜினிகாந்துடன் சேர்ந்து எந்திரன், சிவாஜி என பல ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை ஷங்கர் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி பிரபுதேவாவை கொண்டு இவர் எடுத்த காதலன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இப்படத்தில் பிரபுதேவாவிற்கு பதிலாக பிரசாந்த் நடிப்பதாக இருந்தது என்று ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குநர் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார். மகாபிரபு, பகவதி போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.இந்நிலையில், தினமலர் சினிமா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், “காதலன் திரைப்படத்தின் கதையை இயக்குநர் ஷங்கர் என்னிடம் காண்பித்தார். முதலில் அப்படத்திற்கு நடிகர் பிரசாந்த் தான் ஹீரோவாக நடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென ஒரு நாள் பிரசாந்திற்கு பதிலாக பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து காதலன் திரைப்படத்தை எடுக்கலாம் என்று ஷங்கர் கூறினார். இதற்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியாது.ஆனால், எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. ஏனெனில், ஜென்டில்மேன் படம் பெரிய ஹிட்டானது. அதன் பின்னர், ஒரு லவ் ஸ்டோரி எடுத்து அதில் பிரபுதேவாவை ஹீரோவாக போடலாம் என்று கூறியதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது. எனினும், தனது முடிவில் ஷங்கர் உறுதியாக இருந்தார். பிரபுதேவாவை இளைஞர்கள் பலருக்கு பிடிக்கிறது என்று அவர் கூறினார்.  மேலும், பிரசாந்தின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனவும், படத்தை உடனே தொடங்குமாறு தயாரிப்பாளர் கூறுவதாகவும் ஷங்கர் தெரிவித்தார். பிரபுதேவாவின் பாடல்கள் மற்றும் நடனம் ஹிட்டானதால் அவரை வைத்து படத்தை ஆரம்பிக்கலாம் என்று ஷங்கர் எங்களிடம் கூறினார். ஒரு உதவி இயக்குநர் என்ற அடிப்படையில் எனது மாற்றுக் கருத்தை இயக்குநர் ஷங்கரிடம் கூறினேன். தன்னுடைய முடிவில் ஷங்கர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இப்படம் பெரிய ஹிட்டாகும் என்று அவர் கூறினார்” என இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version