பொழுதுபோக்கு
2 நாள் இங்கே இரு… அப்புறம் என்னை வந்து பாரு; மரணத்தை முன்பே கணித்த எம்.ஜி.ஆர் சரோஜா தேவியிடம் பேசிய கடைசி வார்த்தை
2 நாள் இங்கே இரு… அப்புறம் என்னை வந்து பாரு; மரணத்தை முன்பே கணித்த எம்.ஜி.ஆர் சரோஜா தேவியிடம் பேசிய கடைசி வார்த்தை
தமிழ் சினிமவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்துள்ள எம்.ஜி.ஆர், இப்போது இல்லை என்றாலும், மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது மரணத்தை முன்பே கணித்துவிட்டதாக சமீபத்தில் மறைந்த நடிகை சாரோஜா தேவி கூறியுள்ளார்.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 10 வருடங்கள் சினிமாவில் 2-வது ஹீரோவாக நடித்திருந்த எம்.ஜி.ஆர், 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானர்.அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், திருடாதே படத்தில் சரோஜா தேவியை நாயகியாக மாற்றினார். அதன்பிறகு, தான் இயக்கிய தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில், பானுமதி விலகியதை தொடர்ந்து, 2-வது நாயகியாக சரோஜா தேவியை நடிக்க வைத்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர் தனது படங்களில் சரோஜா தேவிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருடன் இணைந்து நடிப்பதை எம்.ஜி.ஆர் தவிர்த்து வந்தார். இதனிடையே கடந்த 1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சரோஜா தேவிக்கு திருமணமான நிலையில், மருத்துவமனையில் இருந்ததால் எம்.ஜி.ஆர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் சரோஜா தேவியின் கணவர் இறந்தபோது உடனடியாக அவரை சென்று பார்த்த எம்.ஜி.ஆர் அவருக்கு எம்.பி பதவி தருவதாகவும் கூறினார்.எம்.பி. பதவி வேண்டாம் என்று சொன்ன சரோஜா தேவி, அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதனிடையே ஒரு நேர்கணாலில் பேசிய சரோஜா தேவி, 1987, டிசம்பர் 24 ஆம் தேதி. அன்று நான் சென்னைக்குச் சென்றிருந்தேன். ஒரு முக்கியமான வேலையாக நான் அவருக்கு தொலைபேசியில் பேசியபோது, அவர், “ராஜீவ் காந்தி வருகிறார், நேருஜியின் சிலை திறப்பு விழா இருக்கிறது. நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். நீ இரண்டு நாட்கள் இங்கேயே இரு. அதற்குப் பிறகு வீட்டிற்கு வா, பேசலாம்,” என்று கூறினார்.அன்றிரவு ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சி முடிந்து அவர் உறங்கச் சென்றார். மறுநாள், டிசம்பர் 24 ஆம் தேதி காலையில், நான் தங்கியிருந்த அறையில் போன் வந்தது, ஹோட்டல் ஊழியர், “அம்மா, உங்கள் ஹீரோ போய்விட்டார்,” என்று சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன, ஹீரோ போய்விட்டாரா?” ஒரு கணம் எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் தலைவர் போய்விட்டாரா? என்று கேட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான், நீ போகாதே, இங்கேயே இரு, என்று அவர் சொன்னது என் நினைவுக்கு வந்தது.பெங்களூருவில் இருந்து நான் எதற்காக வந்தேன் என்பது அவருக்குத் தெரியும். இங்கிருந்து பெங்களூர் சென்றிருந்தால், திரும்பி அங்கிருந்து வர, ரயிலோ, பேருந்தோ, காரோ, விமானமோ எதுவும் இல்லை. இங்கேயே இருந்ததால், காவல்துறையின் ஜீப்பில் சென்று அவர் காலில் விழுந்து அழுதேன். பின்னர் அனைவரும் என்னைத் தேற்றினர். அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டாலும், அவர் எங்கள் இதயத்தில் குடி கொண்டிருக்கிறார் என்று சரோஜா தேவி கூறியுள்ளார்.