பொழுதுபோக்கு
2-வது திருமணம்? நெற்றியில் குங்குமம் வைத்த மாதம்பட்டி ரங்கராஜ்… யார் இந்த ஜாய் கிரிஸ்டலா?
2-வது திருமணம்? நெற்றியில் குங்குமம் வைத்த மாதம்பட்டி ரங்கராஜ்… யார் இந்த ஜாய் கிரிஸ்டலா?
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவை திருமணம் செய்துள்ள விஷயம் சமூக வலைத் தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.ஜாய்கிரிஸ்டலா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ரங்கராஜ் தனக்கு குங்குமமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.கோயம்புத்தூரைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஆரம்பத்தில் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர், பின்னர் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். தற்போது பல பிரபலங்களின் இல்ல விசேஷங்களுக்கு சமையல் சேவை செய்து வருகிறார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.சமீபத்தில், ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும், ஜாய் கிரிஸ்டலாவை திருமணம் செய்துகொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. காதலர் தினத்தன்று, ஜாய் கிரிஸ்டலா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரங்கராஜை ‘மை மேன்’ என்று குறிப்பிட்டு, அவரது பெயரை தன் பெயருடன் சேர்த்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நானே அவரது மனைவி” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சைகள் குறித்து ரங்கராஜிடம் கேட்கப்பட்டபோது, “தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேவைப்பட்டால் நானே பொதுவெளியில் பேசுவேன்” என்று தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்தச் சூழலில்தான், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸ்டலாவுக்கு குங்குமம் இடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதை ஜாய் கிரிஸ்டலாவே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில், இந்த இரண்டாம் திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.யார் இந்த ஜாய் கிரிசில்டா?ஜாய் கிரிசில்டா புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர். திரைத்துறை மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பல பிரபலங்களுக்கு இவர் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவரின் தனித்துவமான வடிவமைப்புகள், இவருக்குக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன. தனது வடிவமைப்புகள் மூலம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் தனது டிசைன்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருவார்.