பொழுதுபோக்கு

ஆடி மாதத்தில் திருமணமா? ஜாய் கிறிசால்டா மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் எழுப்பும் கேள்விகள்; கோலிவுட்டை அதிரவைத்த மர்மம்!

Published

on

ஆடி மாதத்தில் திருமணமா? ஜாய் கிறிசால்டா மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் எழுப்பும் கேள்விகள்; கோலிவுட்டை அதிரவைத்த மர்மம்!

கோவையை சேர்ந்த நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிறிசால்டாவை திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சி சமூகவலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், ஆடிமாதம் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். இந்த திருமணம் எப்போதோ முடிந்துவிட்டது. போட்டோவை இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று பலர் கூறி வருகின்றனர். இதன் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவைக்கு அருகிலுள்ள மதமபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சமையல் செய்து அசத்தியவர் இந்த ரங்கராஜ். சென்னை முதல் டெல்லி வரை அவரது சமையலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.தற்போது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று வரும் மதமபட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர். இந்தச் சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, மதமபட்டி ரங்கராஜின் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிறிசால்டா, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு, தான் மதமபட்டி ரங்கராஜின் மனைவி என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 26)இரவு, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதமபட்டி ரங்கராஜ் மற்றும் தான் மாலை அணிந்து, கழுத்தில் நகைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, தங்களுக்குத் திருமணமாகிவிட்டதாகத் தெரிவித்தார். திருமணத்தைப் பற்றிப் பதிவிட்ட ஜாய் கிறிசால்டா, நேற்று (ஜூலை 27) ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், மதமபட்டி ரங்கராஜ் மற்றும் தான் இந்த ஆண்டு ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.மாதம்பட்டி ரங்கராஜூவின் முதல் மனைவி ஸ்ருதியும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மதமபட்டி ரங்கராஜின் மனைவி என்று குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், ஜாய் கிறிசால்டாவைத் திருமணம் செய்துகொண்டாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல், ஜாய் கிறிசால்டா பதிவிட்ட மதமபட்டி ரங்கராஜைத் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் பழையதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.ஏனெனில், தற்போது ஆடி மாதம் என்பதால், இந்த மாதத்தில் திருமணம் செய்ய மாட்டார்கள். எனவே, மதமபட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிறிசால்டா பல மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இந்த புகைப்படத்தை ஜாய் வெளியிட்டதால் ரங்கராஜ் மிகவும் வருத்தத்தில் இருப்பதாகப் பேசப்படுகிறது.  இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், ரங்கராஜ் மனநிலை குறித்து கேள்விப்பட்டு, மாதம்பட்டி ரங்கராஜைப் பிளாக்மெயில் செய்வதற்காக ஜாய் கிறிசால்டா இதுபோன்ற புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version