பொழுதுபோக்கு
இது இல்லாம என்னால இருக்க முடியாது; இந்த ட்ரிங்க்கு நான் அடிமை: பவித்ரா லட்சுமி உடைத்த சீக்ரெட்!
இது இல்லாம என்னால இருக்க முடியாது; இந்த ட்ரிங்க்கு நான் அடிமை: பவித்ரா லட்சுமி உடைத்த சீக்ரெட்!
நடிகை பவித்ரா லட்சுமி, அண்மையில் ஒரு வகையான பானத்திற்கு தாம் அடிமையாகி விட்டதாகவும், அதனை தொடர்ச்சியாக அருந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரெட்நூல் அஃபிஷியல் (Rednool Official) என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.மாடலிங் துறையில் பணியாற்றிய பவித்ரா லட்சுமி, விஜய் டி.வி.-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டு பலர் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக, இதில் கோமாளியாக பங்கேற்ற புகழுக்கும், பவித்ரா லட்சுமிக்கும் இடையே காமெடி காம்பினேஷன் அட்டகாசமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பில், சினிமாவிலும் தனது பயணத்தை பவித்ரா லட்சுமி தொடங்கினார்.அதன்படி, நடிகர் சதீஷ் கதாநாயகனாக களமிறங்கிய ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அவர் நுழைந்தார். இதைத் தொடர்ந்து, வேறு சில படங்களிலும் நடிப்பதற்கு பவித்ரா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சூழலில், அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளில், உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் சில வதந்திகள் பரவிய நிலையில், கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாகவே, எடை குறைந்ததாக பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்தார். இந்நிலையில், ஒரு வகையான பானத்தை தாம் தொடர்ந்து அருந்துவதாக பவித்ரா லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “சமீப நாட்களில் ஒரு க்ரான்பெர்ரி பானத்தை (cranberry kombucha) அதிகமாக அருந்துகிறேன். இந்த பானத்திற்கு அடிமையாகும் அளவிற்கு இதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஸெப்டோ (Zepto) ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இந்த பானம் ரூ. 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானம் என்னுடைய உடலுக்கு நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்தினார். இதன் காரணமாக, அதிக அளவில் இந்த பானத்தை அருந்தி வருகிறேன்” என்று நடிகை பவித்ரா லட்சுமி தெரிவித்துள்ளார்.