இலங்கை

இலங்கையில் தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

Published

on

இலங்கையில் தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

எதிர்காலத்தில் முறையாக பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 75 விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 22 மாதிரிகளில் பிற பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

இதன்படி, நுகர்வோருக்கு தரமான தேங்காய் எண்ணெயை உறுதிப்படுத்த, தேங்காய் அபிவிருத்திச் சபை மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவை இணைந்து, பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க தீர்மானித்துள்ளன.

இந்த விதிமுறையை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அனைத்து பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்களும் SLS தர முத்திரை மற்றும் உரிய லேபிள்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version