இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்

Published

on

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்

  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பி.ஏ.ஜி. பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமநாயக்க அவர்களால் இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

Advertisement

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி பி.ஏ.ஜி. பெர்னாண்டோ, இந்த நியமனத்திற்கு முன்னர், மேல் மாகாணத்தின் கல்வி, கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version