பொழுதுபோக்கு

உன்னாலதா அந்த குடும்பம் பிரிஞ்சது; பொது இடத்தில் அடிக்க வந்த பெண்: பயந்து நடுக்கிய சீரியல் நடிகை ஓபன் டாக்!

Published

on

உன்னாலதா அந்த குடும்பம் பிரிஞ்சது; பொது இடத்தில் அடிக்க வந்த பெண்: பயந்து நடுக்கிய சீரியல் நடிகை ஓபன் டாக்!

சீரியலில் வில்லியாக நடித்ததால், ஷூட்டிங் முடிந்து வெளியில் வரும்போது என்னை தாக்க பலர் வந்துவிட்டார்கள் என்று, பிரபல சீரியல் நடிகை அனு சுலாஷ் தனது ஹோம்டூர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில், விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் அனு சுலாஷ். இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ஆண்டாள் அழகர், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். முதல் சீரியலே நெகடீவ் கேரக்டராக நடித்ததால், அடுத்து வந்த எல்லாமே அதே மாதிரியாக கேரக்ட்ராக அமைந்தது என்று அனு சுலாஷ் கூறியுள்ளார்.கலாட்டா பின்க் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள அவரது ஹோம்டூர் வீடியோவில், வீட்டில் 9 வயதில் நாய் ஒன்று உள்ளது. அந்த நாய்க்கு விஸ்கி என்றும், 4 வயதில் உள்ள மற்றொரு நாய்க்கு பீஸ்ட் என்றும் பெயர் வைத்துள்ளனர். இதில் பீஸ்ட் தான் அட்டகாசத்தின் உச்சக்கட்டம் என்று சொல்லும், அனு சுலாஷ், இந்த வீட்டில், முதல் குழந்தை விஸ்கிதான். எந்த டாய் வாங்கினாலும் விஸ்கி எடுத்து கடித்துவிடுவாள். அவள் ஒரு ஹியூமன் நாய் என்று தான் டாக்டர் சொல்லுவார்.பெட் முதல் எது வாங்கி வந்தால் முதலில் எனக்கு தான் என்று எடுத்து சென்றுவிடுவாள் என்று அனு சுலாஷ் கூறியுள்ளார். அதன்பிறகு தனது வீட்டில் இருக்கும் தான் வாங்கிய விருதுகள் குறித்து பேசியுள்ள அவர், நான் கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை என்றாலும், ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கொடுத்த விருதுகள் தான் இவை எல்லாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது அனு சுலாஷ் கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த குழந்தைக்கு பெயர் என்ன என்று சொல்ல மறுத்துவிட்டார்.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியலில் நெகடீவ் கேரக்டரில் நடித்ததால் ஒரு விருது கொடுத்தார்கள். இந்த சீரியலில் ஷூட் முடித்துவிட்டு ஒருநாள் வெளியில் வரும்போது ஒரு துபாயில் இருந்து யாரோ வந்திருந்தார்கள். அப்போது ஒரு பெண் என்னை அடிக்கவே வந்துவிட்டார். உன்னாலதான் அந்த ரெண்டுபேர் குடும்பம், கணவன் மனைவிக்குள் பிரச்னையே வந்தது என்று சொன்னார். அப்போ நான் அழுதுவிட்டேன்.. மறுநாள் நான் இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.அதன்பிறகு ஒரு நடிகர் என்னை அழைத்து பொறுமையாக சொன்னார். உன்னை இப்படி திட்டுகிறார்கள் என்றால் உன் கேரக்டர் அவ்வளவு ரீச் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். அந்த அளவுக்கு நீ சிறப்பா நடிச்சிருக்க. இதுவும் ஒரு விதமாக பாராட்டு தான் என்று சொன்னார். அதன்பிறகு ஒரு வித தயக்கத்துடன் நடிக்க தொடங்கினேன். அதன்பிறகு சரியாகிவிட்டது என்று கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version