இலங்கை

ஒரே பாலினத்தின திருமணத்தால் எப்படி குழந்தை பெற முடியும்? கர்தினால் கேள்வி

Published

on

ஒரே பாலினத்தின திருமணத்தால் எப்படி குழந்தை பெற முடியும்? கர்தினால் கேள்வி

இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார் .

பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் நடைபெற்ற மறைச்செயல் நிகழ்வில் பிரசங்கம் நிகழ்த்திய அவர், 

Advertisement

திருமணத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், தற்காலிக தீர்வுகளை நாடும் புதிய தலைமுறை தவறான பாதையில் பயணிக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

இளம் தலைமுறையை தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றது சில அமைப்புகள்  இலங்கை இப்போது உலகளாவிய போக்குகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரே பாலின திருமணத்திற்கான ஆதரவை இளம் தலைமுறைக்கு ஊக்குவிக்க சில அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன,” என அவர் கவலை தெரிவித்தார்.

Advertisement

ஒரு குடும்பம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து உருவாக்கும் பிணைப்பு. இந்த அடிப்படையை மாற்றும் முயற்சிகள் சமுதாயத்தையே பாதிக்கக்கூடும் எனக் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version