இலங்கை

கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் வடமராட்சி அம்பனில் இருந்து நல்லுரிற்கு மணல்!

Published

on

கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் வடமராட்சி அம்பனில் இருந்து நல்லுரிற்கு மணல்!

வடமராட்சி அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

 வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றது.

 இதனையடுத்து தமது பிரதேசத்தில் கூடியளவில் மணல் அகழப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கிராமத்தை அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மணல் மண் வழங்க மறுத்திருந்தனர்.

 அதேவளை தொடர்ச்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இடம்பெற்றது. 

 இன்று காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம்பெற்றது. 

 அம்பனிலுள்ள தனிநபர் ஒருவருக்கு கனியமணல் அகழ்வுக்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்து நல்லூர் முருகன் ஆலயத்திற்கு பிரதேச செயலரால் மணல் மண் விநியோகம் இடம் பெறுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version