இலங்கை
கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு தீப்பந்தப் போராட்டம்!
கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு தீப்பந்தப் போராட்டம்!
கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் குறித்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி MA.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் இனப்படுகொலையை முன்னிறுத்துவதான கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடைபெற்று முடிந்து 42 வருடங்கள் ஆகின்றன. எனினும் 42 வருட காலமாக தமிழர்களின் நினைவில் அழியாமல் உள்ள இனப்படுகொலையையே கறுப்பு ஜூலை முன்னிறுத்துகின்றது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை