இலங்கை
சர்வதேச விமானநிலையங்களில் பனை உற்பத்திகள் காட்சிக்கூடம்; விரைவில் நடவடிக்கையென கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!
சர்வதேச விமானநிலையங்களில் பனை உற்பத்திகள் காட்சிக்கூடம்; விரைவில் நடவடிக்கையென கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!
இலங்கையிலுள்ள சர்வதேச விமானநிலையங்களில் பனை உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- பனை உற்பத்தித்துறையிலும் மாற்றமொன்று தேவை. பனை சம்பந்தப்பட்ட பொருள்களை நவீன பொருள்களாக மாற்றவேண்டும். உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களில் நவீன தொழில்நுட்பம் பற்றியும் அவதானம் செலுத்தப்படவேண்டும். பனை உற்பத்திப்பொருள்களை, இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் காட்சிப்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது. அதற்குரிய நடவடிக்கையை எமது அரசாங்கத்தின்கீழ் மேற்கொள்வேன் – என்றார்.