இலங்கை

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டவாக்கங்களைப் பலப்படுத்துக; இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

Published

on

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டவாக்கங்களைப் பலப்படுத்துக; இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

சட்டவாக்கக் கட்டமைப்புகளை பலப்படுத்தி- சிறுவர்களுடன் கட மையாற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் ஆற்றலை மேம்படுத்தி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரெனோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கெதிரான அனைத்துவகையான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அழுத்தங்களை வழங்கும் நோக்கில் நடைபெறும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்:- சிறுவர்களுக்கான நீதியில் நேர்மையும் சமத்துவமும் பிரதிபலிக்க வேண்டும். பலமான சான்றுகள், வினைத் திறன்மிக்க தலைமைத்துவம். ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டுடன் இலங்கைக்கு அனைத்து சிறுவர்களும் பயன்பெறும் ஒரு பாதுகாப்பு முறைமையைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்குத் தீர்வு காண்பதில் கல்வித்துறையின் வகிபாகம் இன்றியமையாதது- என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version