இலங்கை

திருகோணமலையில் யூலை கலவரம் நினைவேந்தல்!

Published

on

திருகோணமலையில் யூலை கலவரம் நினைவேந்தல்!

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தினால் நேற்றை தினம் (27) மாலை திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கட தியாகிகள் அரங்கிற்கு முன்னால் யூலை கலவரம் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1983 யூலை 23 முதல் 27 வரையான காலப்பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, ஜெகன், தேவன் உட்பட 52 கைதிகள் மற்றும் அதையொட்டிய யூலை கலவரத்தில கொலை செய்யப்பட்ட 3000 பொதுமக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

இதன்போது அஞ்சலி உரை நிகழ்த்திய மாநகர சபை உறுப்பினரும், ரெலோவின் மாவட்ட உதவி செயலாளருமாகிய தி.பிரபாதரன் இன்று இந்நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெற சிரமப்படுவதற்கான காரணம் அன்று தமிழர்களும் அவர்களது பொருளாதாரமும் அரசு ஆதரவு காடையர்களின் அழிப்பு நடவடிக்கையின் காரணமாவும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தம் இன்றுவரை அரசு பொருளாதாரத்தில் மீள்வதற்காக 2009 இற்குப் பின்னும் இத்தனை வருடமாகியும் முடியாமலுள்ளது.

இனியும் இந்நிலை ஏற்படக்கூடாதென கூறி நினைவு அஞ்சலியை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வருகிறோம் எனக் கூறினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version