பொழுதுபோக்கு
தேவா இந்த பாட்டை கேசட்ல வச்சிக்கலாம், படத்தில் வேண்டாம்; பாட்ஷா ஹிட் பாடலை மறுத்த ரஜினி: இயக்குனர் வைத்த ட்விஸ்ட்!
தேவா இந்த பாட்டை கேசட்ல வச்சிக்கலாம், படத்தில் வேண்டாம்; பாட்ஷா ஹிட் பாடலை மறுத்த ரஜினி: இயக்குனர் வைத்த ட்விஸ்ட்!
பாட்ஷா திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான “நீ நடந்தால் நடை அழகு” பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் வேண்டாம் என்று மறுத்துள்ளார். இந்த சுவாரஸ்யமான தகவல் அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோர் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்துள்ளனர்.நீ நடந்தால் நடை அழகு பாடல் முதன்முதலில் ரஜினிகாந்த்துக்குப் பிடிக்கவில்லையாம். “இந்தப் பாடல் கேசட்டில் மட்டும் இருக்கட்டும், படத்தில் வேண்டாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதனால் இசையமைப்பாளர் தேவா மிகவும் வருத்தமடைந்ததைக் கண்ட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, “இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது, எப்படியாவது இதை படத்திற்குள் கொண்டு வர வேண்டும்” என்று யோசித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை தேவா கவனித்து, “என்ன செய்கிறார்?” என்று கமெண்ட் அடித்து பேசியுள்ளார்.திடீரென சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஒரு அருமையான யோசனை தோன்ற, அதை உடனடியாக தேவா மற்றும் ரஜினிகாந்த்திடம் கூறியுள்ளார். பாடலை ஒரு நடனக் காட்சியாகவோ அல்லது வழக்கமான பாடல் காட்சியாகவோ எடுக்காமல், அதை ஒரு முழுமையான திரைப்பட காட்சியாகவே மாற்றிவிடலாம் என்பதுதான் அவருடைய யோசனையாக இருந்தது. இதை அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இதனை கேட்ட ரஜினிகாந்துக்கும் இது புடித்துப்போக எனக்கு அதில் கண்டக்டர் கேரக்டரும் சேர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த யோசனையின்படி, பாடலில் நடனம் போன்ற வழக்கமான காட்சிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மாறாக, ரஜினிகாந்துக்கு பல்வேறு கெட்டப்புகள் கொடுக்கப்பட்டு, நடிகை நக்மா யாரைப் பார்த்தாலும் ரஜினிகாந்த் போலவே தோன்றுவது போல இந்தப் பாடல் படமாக்கப்பட்டது. ரஜினிகாந்த் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது, ஹோட்டல் மேனேஜர், வில்லன், பஸ் கண்டக்டர், போலீஸ்காரர், ஐயர் எனப் பல வேடங்களில் இந்தப் பாடலில் நடித்திருப்பார். இந்தப் புதுமையான படமாக்கம்தான் “நீ நடந்தால் நடை அழகு” பாடலை பாட்ஷா படத்தின் ஒரு மறக்க முடியாத அங்கமாக மாற்றியது.Thalaivaa 🔥 Saregamapa Li’l Champs Season 4 | One & Only Deva | Sat at 7.00 pm. #SaregamapaLilChampsSeason4 #SaregamapaS4 #SaregamapaTamil #ZeeTamil #ZeeOnTheGoReel