பொழுதுபோக்கு
நான் திரும்பி வர மாட்டேன்னு நினைச்சீங்களா? எனக்கு பதிலா பிரஷாந்த் போட்டீங்களே; தயாரிப்பாளரிடம் கதறி அழுத அஜித்!
நான் திரும்பி வர மாட்டேன்னு நினைச்சீங்களா? எனக்கு பதிலா பிரஷாந்த் போட்டீங்களே; தயாரிப்பாளரிடம் கதறி அழுத அஜித்!
“ஆனந்த பூங்காற்றே” திரைப்படத்தின் தயாரிப்பாளர் காஜா மைதீன், ரோஜா கம்பைன்ஸ் சார்பில் பிஹைண்ட்வுட்ஸ் ஹிட்ஸுக்கு அளித்த பேட்டியில், அப்படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அஜித்குமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தின் ஆரம்பகால சவால்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.ஆனந்த பூங்காற்றே திரைப்படம், அஜித்குமாரின் திரை வாழ்வில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு, ராஜ்கோபால் மற்றும் காஜா மைதீன் தயாரிப்பில், ராஜ் கபூர் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் அஜித் குமார், மீனா மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.அஜித்குமார் இப்படத்தின் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பெசண்ட்நகர் கடற்கரையில் படப்பிடிப்பு நடந்தபோது, அஜித்குமார் ஒரு தெலுங்கு தயாரிப்பாளரால் கடிந்து கொள்ளப்பட்டு அழுது கொண்டிருந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. படத்திற்காக அவர் ரூ.22 லட்சம் சம்பளமாகக் கேட்டதாகவும், அதில் ரூ. 20 லட்சம் கடனை அடைப்பதற்கும், ரூ.2 லட்சம் அன்றாட செலவிற்கும் தேவைப்பட்டதாகவும் மைதீன் தெரிவித்தார். அதனை படம் தொடங்குவதற்கு முன்பாக ஒரே செக்காக கொடுத்ததாகவும் தெரிவித்தார். மீனா மற்றும் கார்த்திக் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்தனர்.முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அஜித்குமாருக்கு ஏற்பட்ட கால் பாதிப்பு காரணமாக ஆறு மாதங்கள் படப்பிடிப்பு தாமதமானது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அஜித்குமார் குணமடைய தாமதமாவதால், இயக்குனர் வேறு ஹீரோவை மாற்றலாம் என்று யோசித்தார். அப்போது நல்ல மார்க்கெட்டில் இருந்த பிரசாந்தை ஒப்பந்தம் செய்ய தியாகராஜ் சாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் தயங்கிய தியாகராஜ் சார், பின்னர் பிரசாந்தை நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரசாந்த், கார்த்திக், மீனா ஆகியோர் இடம்பெற்ற ஒரு புதிய டைரி டிசைன் தயாரிக்கப்பட்டது.அஜித்குமார் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, படக்குழுவினர் அவரைப் பார்க்கச் சென்றனர். அப்போது, பிரசாந்த் ஹீரோவாக மாற்றப்பட்ட செய்தி அடங்கிய புதிய டைரியை யாரோ ஒருவர் அஜித்குமாரிடம் கொடுத்திருந்தார். அதைப் பார்த்த அஜித்குமார், “நான் திரும்பி வரமாட்டேன்னு நினைச்சிட்டீங்களா?” என்று கேட்டு கண்கலங்கினார். உடனே, ராஜ்கோபால் சார் உறுதியாக, “அஜித் சார்தான் இந்தப் படம் பண்றாரு, படம் எடுத்தாலும் சரி, எடுக்காமல் போனாலும் சரி” என்று கூறி அஜித்துக்கு நம்பிக்கையளித்தார்.அஜித்குமார் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த பிறகு, முதல் சண்டை காட்சியை சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் இயக்கினார். அஜித்குமாரை ஒரு குழந்தையைப் போல கவனமாக நடத்தும்படி மாஸ்டரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். இந்தப் படம் வெற்றிகரமாக முடிந்து பெரும் வெற்றியடைந்தது. அஜித்தின் மன உறுதியும், படக்குழுவின் நம்பிக்கையும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாக தெரிவித்தார்.22 லட்சத்துக்கு கண்கலங்கி நின்ன சம்பவம்😥Ajith’s Unknown Story | throwback #ajith #padmaawards2025