இலங்கை

நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் ; அர்ச்சுனா எம்.பி

Published

on

நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் ; அர்ச்சுனா எம்.பி

  எதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.  இதன்போது  மேலும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன்,

Advertisement

2028 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார்.

இது தொடர்பில் சில விடயங்களை அவரிடம் அண்மையில் கலந்துரையாடினேன்.

இதன்போது, அவரது தந்தையை போல மோசடிகளை செய்ய வேண்டாம் என கூறினேன்.

Advertisement

உங்கள் தந்தை பெரியப்பா, சித்தப்பா போன்றோர் மரணிப்பது தொடர்பான வைராக்கியம் தமிழர்களிடையே காணப்படுகின்றது என்பதை எடுத்துக்கூறினேன்.

அத்தோடு , நாமல் அவ்வாறு ஜனாதிபதியானால் எனது முழு ஆதரவையும் அவருக்கு வழங்வேன் எனவும்நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version