இலங்கை

நேற்று – இன்று- நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு!

Published

on

நேற்று – இன்று- நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு!

2009 இல் எங்களுடைய உறவுகள் எவ்வாறு கஞ்சிக்காக சிரட்டையோடு நின்றார்களோ அதேபோல் நாங்கள் இன்று மண்ணை உண்ணுகிறோம் என காசாவில் மக்கள் சொல்கிறார்கள்.

 காலம் எப்படி மாறியிருக்கின்றது இந்த கால மாற்றம் உலகத்தின்கண்களை திறக்கிறது. என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

 கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ‘ நேற்று – இன்று- நாளை’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் இன்று(27) இடம்பெற்றது.

 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில், 

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version