சினிமா
பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்.. முழு விவரம் இதோ
பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்.. முழு விவரம் இதோ
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.நடிகை க்ரித்தி சனோன் கடந்த 2014ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 1: Nenokkadine படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதன்பின் ஹிந்தி பக்கம் சென்ற இவருக்கு அங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிய க்ரித்தி சனோன், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்கிற படத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில், பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 82 கோடி ஆகும். இன்ஸ்டாகிராம் மூலம் வருடத்திற்கு ரூ. 12 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆனால், இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.