பொழுதுபோக்கு

பாடல் காட்சிக்கு 6 பேக் வைத்த நடிகை; பிரபுதேவாவுடன் செம்ம டான்ஸ்; சீரியல் பார்த்து தமிழ் கற்றவர்!

Published

on

பாடல் காட்சிக்கு 6 பேக் வைத்த நடிகை; பிரபுதேவாவுடன் செம்ம டான்ஸ்; சீரியல் பார்த்து தமிழ் கற்றவர்!

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டு, கன்னடத்தில் சில ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர், தமிழில் சீரியலை பார்த்து, தமிழ் கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், அவர் சிக்ஸ் பேக் வைத்து ஆடிய பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பெரிய வெற்றிப்படமான பிச்சைக்காரன் படத்தின் கன்னட ரீமேக்கான அம்மா ஐ லவ் யூ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிஷ்விகா நாயுடு. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், நடிகை சித்தாரா அவரது அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் கன்னட சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது,இந்த படத்தை தொடர்ந்து நிஷ்விகா நாயுடு, அடுத்து, போடிஹூவி, சகத், ஜென்டில்மேன், குரு சிஷ்யரு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கரடக்கா டம்பனக்கா. சிவராஜ்குமார், பிரபுதேவா இணைந்து நடித்த இந்த படத்தில் பிரியா ஆனந்த், ரவி சங்கர் ஆகியோருடன் நிஷ்விகா நாயுடு நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் கிட்டனக்கு என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.பிரபு தேவாவுடன் டான்ஸ் ஆடிய நிஷ்விகா நாயுடு சிக்ஸ் பேக் வைத்து ஆடியது போன்று, இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் கலாட்டா பின்க் யூடியூப் சேனலுகப்கு அளித்த பேட்டியில், ஓரளவு தமிழில் பேசி அசத்தியுள்ளார். மேலும், வீட்டில் எனது பாட்டி தமிழ் சீரியல் பார்ப்பார். அதை பார்த்து நானும் தமிழ் கற்றுக்கொண்டேன். குறிப்பாக ராதிகா மேடம் நடித்த வாணி ராணி, சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்களை அதிகம் பார்ப்பேன்.இந்த பாட்டு இவ்வளவு வைரல் ஆகும் என்று நினைக்கவில்லை. நான் ஒரு பிரபுதேவா தீவிர ரசிகை, அவருடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைக்கிறது என்றதும் உடனயாக ஒப்புக்கொண்டேன். அவர் டான்க்கு கிங். அதை என்னால்மேட்ச் பண்ண முடியாது. ஆனாலும் அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக என்னால் அதை சரியாக செய்ய முடிந்தது. சென்னை, சென்னை இளைஞர்கள், மக்கள் என அனைவருமே எனக்கு பிடிக்கும்.இந்த பாடலில் நான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக பலரும் எனக்கு ஸ்னாப்ஷாட் எடுத்து அனுப்பினார்கள். உங்கள் பாடலில் அதிகம் பார்ப்பது உங்களின் சிக்ஸ்பேக் தான் என்று சொன்னார்கள். அதில் என்ன சீக்ரெட் என்று கேட்க கேட்க அதுவே ஒரு பெரிய விஷயமாக மாறிவிட்டது. சிக்ஸ்பேக் பண்ணணும் என்று நான் பண்ணவில்லை. ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது. எங்களுக்கு ஃபிட்னஸ் என்பது மிகவும் முக்கியம். விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version