பொழுதுபோக்கு

பெரிய ஹிட் படத்தில் ‘யங்’ டி.ஆர்; இந்த சிறுவன் இப்போ காமெடி ஸ்டார்; இவரது மனைவியும் நடிகை தான்!

Published

on

பெரிய ஹிட் படத்தில் ‘யங்’ டி.ஆர்; இந்த சிறுவன் இப்போ காமெடி ஸ்டார்; இவரது மனைவியும் நடிகை தான்!

தமிழ் சினிமாவில் தனக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ள டி.ராஜேந்தர், என் தங்கை கல்யாணி படத்தில் தனது சிறுவயது கேரக்டருக்கு ஒரு நடிகரை நடிக்க வைத்திருப்பார். அவர் இப்போது ஒரு நடிகையின் கணவராக இருக்கிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.இந்த படத்தை இயக்கியது இவர் தான் என்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இயக்குனர் பெயர் மாற்றப்பட்டது என்றும், இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.அந்த வகையில், 1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் எழுதி இயக்கி, தயாரித்து நடித்த படம் என்.தங்கை கல்யாணி. இந்த படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு செய்ததும், டி.ராஜேந்தார் தான். சுதாசொர்னலதா கல்யாணி கேரக்டரில் நடிக்க, ஸ்ரீவித்யா, செந்தாமரை ஆகியோருடன் நடிகர் சிம்பு கல்யாணி கேரக்டரின் மகனாக நடித்திருப்பார். படத்தின் அனைத்து பாடல்களையும் டி.ஆர்.தான் எழுதியிருப்பார். குறிப்பாக, பூ ஒன்று வளர்த்தேன், பூ வாங்கி வந்த நேரம், உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் இளம் வயது வேலு (டி.ராஜேந்தர்) கேரக்டரில் பிரபல காமெடி நடிகர் கனிஷ்கர் தான் நடித்திருப்பார். இந்த படம் தான் அவரின் அறிமுகப்படம். இந்த படத்திற்கு பிறகு, புதுப்புது அர்த்தங்கள், சிவா, நீங்களும் ஹீரோதான் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். நடிகை ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட இவர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.இவரின் மனைவி ஆர்த்தியும், என் தங்கை கல்யாணி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு அருள் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான இவர், வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் தனது கணவருடன் நடித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version