பொழுதுபோக்கு
மகேஷ் பற்றிய உண்மை வெளிவருமா? பாட்டிக்கு தெரிந்த பயங்கர சம்பவம்; கெட்டிமேளம் சீரியல் அப்டேட்
மகேஷ் பற்றிய உண்மை வெளிவருமா? பாட்டிக்கு தெரிந்த பயங்கர சம்பவம்; கெட்டிமேளம் சீரியல் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு அவனது பள்ளி பருவ நண்பன் வருகை தந்திருக்க மகேஷ் அதிர்ச்சியான நிலையில் இன்று, அந்த குரூப் போட்டோவை காட்டி கேட்ட கேள்விகளால் வந்திருந்த நண்பனுக்கு மகேஷ் உண்மைகளை மறைத்து விட்டு செய்யணும் தெரிய வருகிறது.இதனால் அவன் மகேஷிடம் எதுக்குடா இப்படி பொய் சொல்லி வச்சிருக்க என்று கேள்வி கேட்க, மகேஷ் வீட்டில் இருப்பவர்களுக்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பாட்டி மற்றும் அஞ்சலிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கிறான். பிறகு தன்னுடைய நண்பனை கூப்பிட்டு இங்கிருந்து கிளம்ப சொல்ல, அவன் அஞ்சலி கிட்ட எல்லாத்தையும் சொல்லாம விடமாட்டேன். நீ முருகனுக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்க? உன்னோட உண்மையான முகத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன் என்று சொல்கிறான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் அவனை அடித்து துரத்துகிறான். இதையெல்லாம் பாட்டிமா நேரில் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இங்கு என்ன நடக்குது என்று சத்தம் போட, மகேஷ் பாட்டி இது அனைத்தையும் பார்த்து விட்டதை கவனித்து அவனும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு மகேஷ் அப்படி என்ன தான் தவறு செய்தார் என்பது குறித்து ஒரு பக்கம் கேள்விகள் எழுந்தாலும், வெற்றி, துளசி கழுத்தில் அவளுக்கே தெரியாமல் தான் தாளி கட்டினான். ஆனால் வெற்றியின் வீட்டில் துளசி தான், வேண்டுமென்றே வெற்றியை தனது கழுத்தில் தாளி கட்ட சொன்னது போன்று நடந்துகொள்வதும், வெற்றியின் அம்மாவை ஆரம்பத்தில் நல்லவர் போல் காட்டி தற்போது துளசிக்கு வில்லி என்று காட்டுவது பெரிய ட்விஸ்டாக இருக்கிறது. அதேபோல் அடுத்து வரும் எபிசோடுகளில், அஞ்சலி, மகேஷ் சுயரூபம் தெரிந்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது..