பொழுதுபோக்கு
ரஜினிக்கு மனைவி, கமல் படத்தில் பாடகி; இவர் பாடிய எவர்கிரீன் பாடல் தெரியுமா?
ரஜினிக்கு மனைவி, கமல் படத்தில் பாடகி; இவர் பாடிய எவர்கிரீன் பாடல் தெரியுமா?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்தின் புகழ் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால், ரஜினிகாந்தின் மனைவி லதாவும் சினிமா துறைக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக, இவர் பாடிய சில பாடல்கள் பெரும் ஹிட்டாகி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?முன்னதாக, ரஜினிகாந்தின் திருமணமே சுவாரயஸ்யமானது என்று அன்றைய காலகட்டத்தில் கூறுவார்கள். சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த லதா, ஒரு நேர்காணலுக்காக ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் உருவானது. இதைத் தொடர்ந்து, கடந்த 1981-ஆம் ஆண்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.லதா அடிப்படையில் நடிகை இல்லையென்றாலும், ஒரேயொரு திரைப்படத்தில் மட்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார். அதன்படி, 1982-ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அக்னிசாட்சி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் லதா தோன்றி இருப்பார். குறிப்பாக, இப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாகவே நடித்திருப்பார். ஆனால், சில திரைப்படங்களை லதா தயாரித்திருக்கிறார். அதன்படி, கடந்த 1986-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் 1993-ஆம் ஆண்டு வெளியான ‘வள்ளி’ என இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இது தவிர பின்னணி பாடகியாகவும் லதா அறியப்படுகிறார். இதுவரை 5 பாடல்களை மட்டுமே பாடியுள்ள இவர், இளையராஜாவின் இசையில் 4 பாடல்களை பாடி இருக்கிறார். இதில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தில் இடம்பெற்ற ‘நேற்று இந்த நேரம்’ பாடலை லதா பாடியுள்ளார். இந்த பாடல் கண்ணதாசன் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 1984-ஆம் ஆண்டு வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் உள்ளமே கருணை இல்லமே’ பாடலையும் லதா பாடி இருக்கிறார்.கடைசியாக, 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ‘மணப்பெண்ணின் சத்தியம்’ பாடலை லதா பாடினார். மிகச் சில பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும், இவை அனைத்தும் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட்டாக உள்ளன.