விளையாட்டு

20 நாடுகள் பயிற்சி மாமல்லபுரத்தில் 4வது சர்வதேச சர்பிங் போட்டி

Published

on

20 நாடுகள் பயிற்சி மாமல்லபுரத்தில் 4வது சர்வதேச சர்பிங் போட்டி

இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவார்கள். இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சீன தைபே, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 20 நாடுகளை சேர்ந்த சர்பிங் வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

ஏசியன் சர்ஃபிங் அசோசியேஷன் சார்பில் ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் 4-வது [ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்-2025] போட்டிக்கான முதற்கட்ட பயிற்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் தொடங்கியது.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரம் பதக்கங்கள் வழங்கப்படும்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version